கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல் தலைவர் அய்யாசாமி துணை தலைவர் சமூக ஆர்வலர் லயன்.தேவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு ஹில் கவுண்டி பஸ் நிறுத்தம் அமைக்க உறுதுணை புரிந்த பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு கடிதம் கொடுக்கப்பட்டது மேலும் கூட்டத்தில் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு மேம்பால பணிகள் காரணமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சுற்றி சென்று வந்ததின் காரணமாக 24 ரூபாய் பேருந்து கட்டணம் 28 ரூபாய் ஆக வசூலிக்கபட்டது தற்போது மேம்பால பணிகள் முடிவடைந்து கீழே செல்லும் சாலைகள் சரி செய்யப்பட்டு நேர் வழியில் பேருந்துகள் செல்வதால் பழைய கட்டணமான 24 ரூபாயே கட்டணமாக வசூலிக்க வேண்டும் மேலும் பேருந்துகளில் கட்டண தொகை மற்றும் வழித்தடங்கள் பேருந்து உள்ளே நிறுவ வேண்டும் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் படிக்கட்டுக்களில் தொங்கி செல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதால் இதை போக்குவரத்து துறை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது