நாமக்கல் மாவட்டதில் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன கூட்டம் பள்ளிபாளையம் விஹெச்பி அலுவலகத்தில் நடைபெற்றது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் கார்த்திகேயன் சக்தி ஆகியோர் கடந்த டிசம்பர் (6-12-2023) ஆறாம் தேதி தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்டச் செயலாளர் சபரிநாதன் அவர்களை கைது செய்த விதத்தினை கண்டித்து நடந்த இக்கூட்டத்தில் மனித உரிமை மீறியும் தீவிரவாதிகளை கைது செய்வது போல் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி தகாத வார்த்தையில் திட்டி ஜீப்பில் அடைத்து அவரது வழிபாட்டு உரிமையை செய்யவிடாமல் மன உளைச்சல் ஏற்படுத்தியும் அவர் வாழும் பகுதியில் அவர் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் அவர் வீட்டிற்கு பல காவலர்கள் சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டியது மனஉளைச்சல் ஏற்படுத்தியும் மேலும் மற்ற இயக்க நிர்வாகிகள் வீட்டில் அத்துமீறி சென்று நிர்வாகிகள் சம்பந்தமாக அவர்களது குடும்பத்தினரையும் மிரட்டிய செயலால் அப்பட்டமான மனித உரிமையும் மீறி செயல்பட்ட காவல்துறை அனைவரையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்புவது என்றும் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அயோத்தி வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து தற்போது இந்து முஸ்லிம்களோ ஒற்றுமையாக இருந்து வரும் நேரத்தில் இது போன்ற இயக்க சகோதரர்களை வேண்டும் என்று திட்டமிட்டு இந்த பகுதியில் மட்டும் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதுகுறித்து குறுகிய காலத்துக்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள தவறினால் தமிழக முழுவதும் உள்ள தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து பள்ளிபாளையம் காவல்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுபோன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை வகித்தார் கோட்டத் தலைவர் ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் சிவகுரு கோவை கொள்கை பரப்பு செயலாளர் சேலம் கோட்டசெயலாளர் சபரிநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜேந்திரன் உதயசூரியன் பழனிச்சாமி சரவணன் கார்த்தி மணிகண்டன் சந்திரன் செந்தில்குமார் அஜித்குமார் சரவணன் ராஜ்குமார் நாகராஜ் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்