சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை.!- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!


 சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை.!-  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!


தூத்துக்குடி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கோசாலைகளில் ஒப்படைத்து, கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 2023 மாதத்திற்கான சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களது தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.11.2023 அன்று நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பஞ்சாயத்து சாலைகள் ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கோசாலைகளில் ஒப்படைத்து, கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும், மீண்டும் தொடர்ந்து கட்டுப்பாடின்றி கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post