தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ 6 ஆயிரம் வழங்க இன்று முதல் வீடுகளுக்கே டோக்கன் விநியோகம் - மாவட்ட ஆட்சியர் தகவல்


 தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ 6 ஆயிரம் வழங்க இன்று முதல் வீடுகளுக்கே டோக்கன் விநியோகம் - மாவட்ட ஆட்சியர் தகவல்


தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக இன்றுமுதல் (26-12-2023) குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000/- குறைவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1000/- ஆகியவை வழங்கும் பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர்கள் வீட்டுக்கே சென்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் டோக்கன் வழங்கும் பணி 26-12-2023 முதல் ஆரம்பிக்கப்படுகிறது. 29-12-2023 முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சென்று குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண நிதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post