தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கன மழை.! - ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 479.00 மிமீ மழை பதிவு.!




 தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கன மழை.! - ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 479.00 மிமீ மழை பதிவு.!

தென்மேற்கு வங்ககடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சுழல் காற்றானது மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்றும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக இன்று 2வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்)

ஸ்ரீவைகுண்டம் : 479.00 மிமீ, 
திருச்செந்தூர் : 360.00 மிமீ, 
காயல்பட்டினம் : 369.00 மிமீ, குலசேகரப்பட்டினம்: 199.00 மிமீ,
சாத்தான்குளம் : 328.40 மிமீ,  கோவில்பட்டி : 223.00 மிமீ,
கழுகுமலை : 88.00மிமீ,
கயத்தாறு : 153.00 மிமீ,
கடம்பூர் : 155.00மிமீ,
எட்டயபுரம் : 77.60 
விளாத்திகுளம் : 78.00 மிமீ,
கடல்குடி : 30.00 மிமீ,
விளாத்திகுளம் : 14 மிமீ,
வைப்பார் : 74.00 மிமீ,
சூரங்குடி : 65.00 மிமீ,
ஓட்டப்பிடாரம் : 112.00 மிமீ,
மணியாச்சி : 183.00 மிமீ,
ஓட்டப்பிடாரம் : 18 மிமீ,
வேடநத்தம் : 45.00 மிமீ,
கீழஅரசடி : 28.00 மிமீ

மொத்தம் : 3115.40 மிமீ
சராசரி மழைப்பொழிவு 163.97 மிமீ பதிவாகியுள்ளது.

Previous Post Next Post