பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை.* ஜன.3 மீண்டும் பேச்சுவார்த்தை.




போக்குவரத்து கழக உயர் அதிகாரி கள்பங்கேற்காததால்,பேச்சுவார்த்தை .யில் முன்னேற்றமில்லை என்று சிஐ டி யூ மாநிலத் தலைவர் அ.சவுந்தரரா சன்  தெரிவித்துள்ளார்.காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெ ட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய் வுபெற்ற ஊழியர்களுக்கு 99 மாதங்க ளாக வழங்கப்படாமல் உள்ள அக லிலைப்படி உயர்வை வழங்க வேண் டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய் வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தபடிபேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.19ந் தேதி  மேலாண் மை இயக்குநர்களிடம் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனை த்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலசங்கங்களின் கூட்ட மைப்பு வழங்கியது. இதனையடுத்து புதனன்று (டிச.27) தொழிலாளர் நல தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார் த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு உள்ளிட்ட 24 சங்கங்களின் தலைவர் கள், போக்குவரத்து கழகங்களின்அதி காரிகள் பங்கேற்றனர்.. பேச்சு வார்த் தை.க்கு பிறகு செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: அக விலைப்படி உயர்த்திவழங்காததால் ஓய்வூதியர்கள் உரிய ஓய்வூதியத்தை பெற முடிய வில்லை. நீதிமன்ற தீர்ப்பு களை கூட செயல்படுத்த மறுக்கின்ற னர். பல மாநிலங்களில் பழைய,  திட் ட த் தை செயல்படுத்த தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசு செயல்படுத்தா மல் இருப்பது சரியல்ல. 6 ஆயிரபேரு ந்துகள் ஓடாமல் இருப்பதற்கு காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பதுதான் காரணம்.  கருணை அடிப்படையில் உடியாக வேலை வழங்க வேண்டும். 15 வது ஊதிய ஒப்பந்த  & இன்னும் தொடங்க வில்லை. அரசு உடனடியாக பேசவேண்டும். இன்றைய கூட்டத்தில் போக்குவரத்து கழக மேலாண் இயக் குநர்கள் கலந்து கொள்ளவில்லை. முத்தரப்பு பேச்சுவார்த் தையை ஒரு பொருட் டாக எடுத்துக் கொள்ள வில்லை   எனதெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை.இதே நிலை நீடித்தால் ஜனவரி 4 க்கு பிறகு வேலை நிறுத்தம் செய்ய உறுதியாக

இருக்கிறோம். வேலை நிறுத்தத்தை விளக்கி டிச.30, 31, ஜன.2 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடைபெறும். ஜன.4 தேதி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொழிலாளர் இணை ஆணையர் அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல் செய்து இருக்கிறார். அடுத்த பேச்சு வார்த்தை ஜன.3ந் தேதி நடக்க உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அழைத்து பேசினால் நல்லது. வேலை நிறுத்தம் பிரச்சனை தீர வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post