திருப்பூரில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி பல்லாயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம்...37 சங்கங்கள் பங்கேற்பு

திருப்பூரில் மின் கட்டண உழுயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது. 

தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம், மற்றும் பீக் ஹவர் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை அடுத்து மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று திருப்பூர் குமரன் சிலை முதல் மாநகராட்சி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது. இதில் திருப்பூரை சேர்ந்த தொழில் அமைப்பினரை கொண்ட 37 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மனித சங்கிகியாக கை கோர்த்து நின்று மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர். 

இந்த போராட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம், முன்னாள் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பல்லடம் எம்.எல். ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம்,  தமிழகத்தில் 37 - தொழில் அமைப்புகள் இணைந்து மின் கட்டண உயர்வுக்கு எதிராக 8 கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.  தமிழக அரசு தொழில் துறையினரை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது,திருப்பூரில் 70% தொழில்கள் மூடப்பட்டுள்ளன, தொழில்துறையினர் அழைத்து தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், வருகிற பத்தாம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.தமிழக அரசு கண்துடைப்புக்காக பெயரளவுக்கு கோரிக்கைகளை குறைத்துள்ளது என்று கூறினார்.

அதிமுக எம்.எல்.ஏ., வும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ள நிலையில் மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வுகள் மேலும் சிரமத்தை உருவாக்கி உள்ளன.3 மாதங்களாக பல போராட்டங்களை நடத்தியும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. என்பதால் எடப்பாடியர் வழிகாட்டுதல் படி இந்த போராட்டத்துக்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவத்து உள்ளோம். திமுக அரசு மின் கட்டண உயர்வினை குறைக்க வேண்டும். என்றார்.

Previous Post Next Post