தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவலா? 258 பேருக்கு சோதனை செய்ததில் 9 பேருக்கு 'பாசிட்டிவ்'

 கொரோனா பரவல் தொற்று உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டு இருக்கிறது. நம்முடன் வாழ்ந்த பல பேர் இந்த நோய்க்கு பலியாகி மறைந்தும் போனார்கள். மத்திய அரசின் சுகாதாரத்துறை கொரோனா ஆரம்பித்தது முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 சதவீதம் பேர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளது.

இன்னும் பலர் கொரோனாவால் ஏற்பட்ட உடல் உபாதைகளை சமாளித்து கொண்டு வாழ்கிறார்கள். 

நிலைமை இப்படி இருக்கையில் கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வரும் செய்திகள் நமது காதுகளுக்கு வருகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா வேகம் எடுக்குமா என பலரும் அச்சம் தெரிவிக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நிலவரம் எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் நேற்றைய மாலை நிலவரப்படி 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இதில் சென்னையில் 5 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும் சேலத்தில் ஒருவருக்கும், ஈரோட்டில் ஒருவருக்கும் என மொத்தமாக 9 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இதன்மூலமாக இதுவரைக்கும் 38 பேர் கொரோனாவுக்காக மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 258 பேருக்கு சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

முன்னதாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று சென்னையில் 2 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும், திருவாரூரில் இரண்டு பேருக்கும், திருப்பூரில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இறப்புகள் ஏதும் இல்லை. 

இதுவரைக்கும் கொரோனா தொடங்கியதில் இருந்து மொத்தமாக 36 லட்சத்து 10 ஆயிரத்து 845 பேர் இந்த நோய் உறுதி செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

38 ஆயிரத்து 81 பேர் இதுவரை இந்த நோய் பாதிப்பால் இறந்து விட்டார்கள். 

இந்த தகவல் அரசு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் குறைந்த அளவு தான் இருக்கிறது என்று எண்ணாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நமக்கு நல்லது.

Previous Post Next Post