ஒடிசா: சரக்கு கப்பலில் இருந்து ரூ.220 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்.!


 ஒடிசா: சரக்கு கப்பலில் இருந்து ரூ.220 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்.!


புவனேஸ்வர்: ஒடிசாவில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்று பாரதீப் துறைமுகத்தில் நின்றிறுந்த சரக்கு கப்பலில் இருந்து 22 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 220 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தோனேசியாவில் இருந்து வியாழன் இரவு பரதீப் வந்தடைந்த சரக்குக் கப்பல், டென்மார்க் நோக்கிப் புறப்படவிருந்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இடைப்பட்ட இரவில், புவனேஸ்வரில் உள்ள சுங்கப் பிரிவுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோதனையில் இறங்கிய சுங்கத்துறை அதிகாரிகள் கப்பலில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது 22 பாலித்தீன் மூடிய பாக்கெட்டுகள், கப்பலில் கிரேனின் மேல்புறத்தில் காந்தங்களால் ஒட்டப்பட்டிருந்தன, அவை டெக்கிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை. பொட்டலங்களை கைப்பற்றிய பின்னர், அவற்றில் சுமார் 22 கிலோ உயர்தர கொக்கைன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில், 1 கிலோ கோகோயின் விலை குறைந்தது 10 கோடி ரூபாய்” என்று சுங்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.


கடத்தல் தொடர்பாக கப்பலின் அனைத்து உறுப்பினர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post Next Post