திருப்பதி திருமலையில் வெங்கடேச பெருமாள் தரிசனத்துக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவமாய் தவமிருந்து காத்திருக்கிறார்கள். ஆன்லைன் புக்கிங் எல்லாமே விரைவில் தீர்ந்து விடுவதால் திருப்பதி திருமலையில் வெங்கடேச பெருமாள் தரிசனம் என்பது ஒவ்வொரு முறையும் பலருக்கும் தள்ளிக் கொண்டே போகிறது.
தற்போது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி நாள் வரை தரிசன புக்கிங் முழுமையாக முடிந்து விட்டது. இந்த நிலையில் தான் பெருமாள் பக்தர்கள் எப்போது அடுத்த கட்ட தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடும் என்று காத்திருக்கிறார்கள்.
அப்படி காத்திருக்கும் பெருமாள் பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் தான் நாம் சொல்லப்போவது...
மார்ச் 2024 க்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் தேதியை தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
அதன்படி
மார்ச் 2024க்கான புதிய திருமலை அங்கபிரதட்சனம் டோக்கன்கள் 23.12.2023 காலை 10:00 மணிக்கு முன்பதிவு செய்யக் கிடைக்கும். திருமலை வெப் சைட் மூலம் புக்கிங் செய்யலாம்.
23.12.2023 மாலை 3:00 மணிக்கு மூத்த குடிமக்கள் / உடல் ரீதியாக சவாலானவர்கள் மார்ச்-2024 இல் தரிசனம் செய்வதற்கான ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
மார்ச்-2024க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் (ரூ.300 டிக்கெட்டுகள்) முன்பதிவு செய்ய 25.12.2023 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மார்ச் 2024 க்கான திருமலை மற்றும் திருப்பதி தங்கும் இட ஒதுக்கீடு, முன்பதிவு செய்ய 25.12.2023 மாலை 03:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மார்ச் 2024 க்கான புதிய ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிஐபி பதிவுகள் 18.12.2023 காலை 10:00 மணி முதல் வெளியிடுகிறார்கள். இதற்கான பதிவுகள் 18.12.2023 10:00 AM முதல் 20.12.2023 10:00AM வரை திறந்திருக்கும்
மார்ச் 2024க்கான கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவா போன்ற சேவைகளுக்கான புதிய ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய 21.12.2023 தேதியில் காலை 10:00 மணிக்கு வலைத்தளம் திறக்கப்படுகிறது.
புதிய ஆன்லைன் சேவை (மெய்நிகர் பங்கேற்பு) மற்றும் மார்ச் 2024க்கான திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலின் கலைநோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் & சஹஸ்ர தீபாலங்கார சேவைகளுக்கான இணைக்கப்பட்ட தர்ஷன் ஒதுக்கீடு ஆகியவை 21.12.2023 மாலை 3:00 மணிக்கு பதிவு செய்ய முடியும்.
இந்த தகவலை தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
இவற்றில் எல்லாம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் மனம் வருத்தப்பட வேண்டியதில்லை. திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாஸ் கட்டிடத்தில் காலை 5 மணி முதல் தினமும் இலவச சேவைக்கான தரிசன டிக்கெட் கொடுக்கிறார்கள். நேரில் ஆதார்கார்டுடன் சென்றால் பெற்றுக் கொண்டு அதே நாளில் சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த தரிசனம் சுமாராக 4 மணி நேரத்தில் சாமி பார்க்க முடியும் என்கிறார்கள்.