கோபி மாரத்தான் -2023
கோபி கலை அறிவியல் கல்லூரி, கோபி ரோட்டரி கிளப், கோபி உழவன் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கோபி மாசானிக், நம்ம கோபி பவுன்டேசன், இந்திய மருத்துவ சங்கம், பிஎன் ஐ ஹார்மோனி, கோபி அனைத்து வியாபாரிகள் சங்கம், ஒய்ஸ் மென் கிளப் ஆப் கோபி கேளக்சி, ஒய்ஸ் மென் கிளப் ஆப் கோபி கிலிட்டர்ஸ்,ஈரோடு மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் பிட் இந்தியா கோபி மாரத்தான் -2023 வருகின்ற சனிக்கிழமை காலை 6மணிக்கு கோபி கலை அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு மூன்று பிரிவுகளாக துவங்க உள்ளது.இதில் முதல் பிரிவாக 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,இரண்டாவது பிரிவாக கல்லூரி நுழைவாயிலில் இருந்து முத்து மஹால் வரை சென்று மீண்டும் கல்லூரி நுழைவாயில் வரை 5 கிலோமீட்டரும்,மூன்றாவது பிரிவாக கல்லூரி நுழைவாயிலில் இருந்து சீதா கல்யாண மண்டபம் வரை சென்று மீண்டும் கல்லூரி நுழைவாயில் வரை 12 கிலோமீட்டரும் நடைபெற உள்ளது.இந்த மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு
முதல் மூன்று இடங்களில் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகளும் மற்றும் மாரத்தானில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் 3203 ரோட்டேரியன் ஏ.கே.எஸ். கே. சண்முகசுந்தரம், கோபி ரோட்டரி உழவன் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரோட்டேரியன் கிருஷ்ணகுமார், கோபி அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் பிரபு, கோபி மாசாணி கிளப் முன்னாள் தலைவர் கார்த்திகேயன், நம்ம கோபி பவுண்டேஷன் தலைவர் டாக்டர் அனுப் மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் எம். தரணிதரன், கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் வீ. தியாகராசு, கல்லூரி முதன்மையர் முனைவர் ஆர். செல்லப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.