*15 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பயணி! பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாட்டுப் பணிகள்! உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*

*15 அடி பள்ளத்தில் விழுந்த பெண்  பயணி! பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் மயிலாடுதுறை  ரயில்வே மேம்பாட்டுப் பணிகள்!  உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* 
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 24கோடியில் நடைபெறும் பணிகளுக்காக வெட்டப்பட்ட15 அடி குழியில் பெண்மணி விழுந்தார்! ஆபத்தான நிலையில்  காயங்களுடன் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக  எனக்கு தகவல் கிடைத்திருப்பதை அறிந்து  மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். ஏற்கனவே மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெறும்  விரிவாக்க பணிகள் முறையாக செய்யப்படவில்லை, பாதுகாப்புவிதிகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எழுந்துள்ள நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து முதல் நடைமேடையில் இறங்கி வந்த சுமார் 50 வயது பெண்மணி  அங்கே வெட்டப்பட்ட 15  அடி பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்பட்டு, அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இணைந்து தூக்கி உயிர் தப்பியது குறித்து உடனடியாக ரயில்வேத்துறை விசாரணை மேற்கொண்டும்,  தனி கவனம் செலுத்திடவும் வேண்டும். ரயில் நிலையம் அழகு படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்ற தருவாயில், பொதுமக்கள் பெண்கள் முதியோர் குழந்தைகள் அதிகமாக கூடுவதால், பணிகளின் பொழுது இது போன்று பாதுகாப்பு இல்லாமல் குழிகளை வெட்டி வைப்பது எந்தவித அறிவிப்பு பலகையும் தடுப்பு பணிகளும் இல்லாமல் செய்வது மிகவும் ஆபத்தானது. ஏற்புடையதல்ல.ஆகவே  உடனடியாக பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பொதுப் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என்பதை ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் ஒப்பந்ததாரர்களும் உரிய வழிமுறையோடு முறையாக தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே துறை பொறியாளர்கள் கண்காணித்து தொடர்ந்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்...
Previous Post Next Post