சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்... அண்ணாமலை வலியுறுத்தல்


சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

சென்னை புயல் பேரிடர் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூ நிவாரண உதவி தர வேண்டும் என பாஜக தரப்பில் கொடுக்க வேண்டி கோரிக்கை வைத்திருந்தோம்

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரது தந்தையாரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்

அவரே ஒரு அறிக்கை வெளியிட்டு, கேள்வி கேட்டு அவரே பதில் அளித்திருக்கிறார்மத்திய குழு சென்னை வந்தது, தமிழகத்தில் நான்கு அத்காரிகள் அவர்களை அழைத்து சென்றார்கள்

அதிகாரிகள், இன்னொரு அதிகாரிகளுக்கு சாதகமாக தான் இருப்பார்கள்

எனவே தமிழக அதிகாரிகள் நன்றாக பணியாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்கள்

நாங்கள் அதனை ஏற்று கொள்ள போவதில்லை

 தண்ணியே இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று அவர்களை காட்டி இருக்கிறார்கள்

அரசு துறையில் பணியாற்றும் யாரும் முதல்வர் நன்றாக பணியாற்றவில்லை என சொல்லமாட்டார்கள்

10,000 ரூ என்பது குறைந்தபட்சம் வழங்கப்பட வேண்டும்

முதல்வரின் மகன், உங்கப்பா வீட்டு பணமா கேட்டோம் என கேட்கிறார்கள்...

: இது எதுவுமே தெரியாமல், முதலமைச்சர் பணத்தை விரைந்து கொடுக்க கேட்கிறார்

பாஜக வின் மாண்பு என்பது, நாளை பிரதமர் வந்தால் கூட நீங்கள் கஷ்டபட்டு உள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என சொல்வார் 

ஒரு முதலமைச்சர் அதிகாரிகள் கொடுக்கிற சான்றிதழை, அப்படி உடனே எடுத்துக்க கூடாது. 

மந்திரிகள் வரும் போது கஷ்டத்தில் ஒத்துழைக்க தான் வருவார்கள், குறை செல்வது ராஜ்நாத் சிங் வேலை கிடையாது.

அவர் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு உடல் சரியில்லை என்றால் ஆறுதல் சொல்வது போல, தமிழகம் நன்றாக பணியாற்றி இருக்கிறது என சொல்வார்கள்

அதனை முதல்வர் சுட்டிக்காட்டி பேசக்கூடாது எனவே முதல்வர் இதனை ஒப்புக் கொள்ள வேண்டும், அவரது அரசு இதனை கையாண்ட விதம் மோசம் என்பதை....

பணம் கேட்ட பிறகு உடனே கிடைக்காது

மத்திய அரசின் பேரிடர் பணம் என்பது, இழப்பின் கணக்கீட்டை பொறுத்து தான் பின்பு தரப்படும்

மாநில அரசின் வேலை, என்னென்ன சேதங்கள் இருக்கிறது என்பதை தான் பேச வேண்டும்.. குறை சொல்ல கூடாது

ராஜ்நாத் சிங் விமான நிலையத்தில் என்னிடம் என்ன பேசினார் என்பதை என்னால் சொல்ல முடியாது.அதிகாரிகள் புள்ளி விவரங்களை எடுப்பதற்காக தான்... குற்றம் சொல்வதற்காக வரவில்லை.. அவர்கள் அரசியல் பேச மாட்டார்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருந்தால் நான் மாநில அரசை குற்றம் சொல்ல மாட்டேன்

பாஜகவை விட பழமையான கட்சி திமுக

அந்த தலைவர்கள், தொண்டர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? தேர் ஊர்வலம் சென்றது போல இருந்தார்கள்

பாஜக வை குறை சொல்கிறார்கள் என்றால், பாஜக வளர்ச்சி அடைகிறது என்று தான் அர்த்தம்

 அம்பத்தூர் தொழிற்பூங்காவிற்கு சென்று பார்க்கவில்லை 2000 கோடி வரை

எங்களது அணி CPCL ஐ பார்க்க சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தொகையை ஒதுக்கி இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். பாஜக வின் ஒரே கோரிக்கை அது தான்

தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக அதிகாரிகள் சொல்லும் கருத்தை முதல்வர் எடுத்து கொண்டு வந்து பேசும் மோசமான நிலை நடக்கிறது

பொறுப்பில் இருப்பவர்கள் குறை சொல்ல மாட்டார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் மத்திய அரசின் சார்பில் உதவி செய்ய இங்கே வந்திருக்கிறார்கள்

நீங்கள் கோட்டை விட்டதை சொல்ல மாட்டார்கள்

Previous Post Next Post