கோபி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், கோபி ஆர்ட்ஸ் சைக்கிளிங் கிளப், மற்றும் கோபி ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாபெரும் சைக் கிளிங் விழிப்புணர்வு பயணம்,
பல்கலைக்கழக மானியக்குழுவின் FIT INDIA MOVEMENT வழிகாட்டுத லின்படிசைக்கிளிங் பயிற்சிசெய்வ தால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இரண்டு நாட்கள் மாபெரும் சைக்கிள் பேரணி, 100கி.மீ. தூரம் வரை முனைவர் கே. ராஜேந்திரன், முனைவர் பிரசாந்த், முனைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.. முதல் நாளான நேற்று 09-12-2023 (சனிக் கிழமை) காலை 9.00 மணியளவில் கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கி, அளுக்குளி, குருமந்தூர், நம்பியூர், கடத்தூர், அர சூர், அரியப்பம்பாளையம் வழியாக சத்தி கொங்கு திருமண மண்டபத்தில் மாலை நிறைவுபெற்றதுஇரண்டாம் நாள் 10-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) கொங்குதிருமணமண்டபத்தில்தொட ங்கி, கே.என். பாளையம், காளியூர், நால்ரோடு, டி. என். பாளையம், கள்ளிப்பட்டி, நஞ்சகவுண்டன் பாளை யம், கரட்டூர் வழியாக கோபி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வுப் பேர ணி நிறைவு பெறுகிறது.
சைக்கிள் பேரணிஅரியப்பம் பாளை யம் அருகே வந்தபோது அரியப்பம் பாளையம் பேரூராட்சி முன்பு, பட்டாசு வெடித்து, சைக்கிள் பயண வீரர்களை வரவேற்று,பேரூராட்சிமன்றத்தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் ஜோதி யை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சி யில், அரியப்பம்பாளையம் திமுக செயலாளர் வழக்கறிஞர் செந்தில் நாதன், மாவட்டபிரதிநிதிகள் துரை சாமி, சுப்பிரமணியன் மற்றும் ஈரோடு மாவட்ட திமுக அமைப்புசார ஒட்டுனர் அணி து.அமைப்பாளர் கந்தசாமி உள்ளிட்ட திமுகவினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு,சைக்கிள் பயண வீரர்களை வரவேற்றனர்.