முக்கிய எச்சரிக்கை - தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் தற்போது (இரவு 10.00 மணி ) வந்து கொண்டிருப்பதால் ஆற்றங்கரையோர மக்கள் உடனே வெளியேற தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு.!
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில்:-
திருநெல்வேலி மாவட்டம் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் தற்போது (17.12.2023 நேரம் இரவு 10.00 மணி ) வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியினை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு /அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.