இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கம்.!


 இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கம்.!


இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சேவை துவங்கியது; ரயில் சேவையை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தனர்.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் புதன்கிழமை கூட்டாக மூன்று இந்திய உதவி வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர் - இந்தியாவிற்கும் அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை துவங்கப்ட்டு உள்ளது.



புதன்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்களாதேஷ் பிரதமருடனான உரையாடலில், பிரதமர் மோடி, “இந்தியா-வங்காளதேச ஒத்துழைப்பின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். நமது உறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டுகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாங்கள் இணைந்து செய்த பணிகள் இதற்கு முந்தைய தசாப்தங்களில் கூட செய்யப்படவில்லை என பிரதமர் மோடி கூறினார்.


பிரதமர் மேலும் கூறுகையில், “கடந்த ஒன்பது ஆண்டுகளில், நமது உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது... இன்று, அகௌரா-அகர்தலா ரயில் இணைப்பின் திறப்பு விழா ஒரு வரலாற்று தருணம் என தெரிவித்தார்.


இது வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான முதல் ரயில் இணைப்பு... திரிபுரா பங்களாதேஷின் விடுதலைப் போராட்டத்தின் நாட்களில் இருந்து வலுவான பிணைப்பைக் கொண்டிருந்தது.


அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பின் சர்வதேச குடியேற்ற மையம் இந்திய-வங்காள எல்லையில் உள்ள இந்தியாவின் கடைசி ரயில் நிலையமான நிசிந்தாபூரில் அமைக்கப்படும். திரிபுரா வங்காளதேசத்துடன் 856-கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, அதன் சில பகுதிகள் உள்ளூர் தகராறுகளால் இன்னும் வேலி அமைக்கப்படவில்லை.

Previous Post Next Post