துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் இறுதிக்கட்டப் பணி - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு

துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் இறுதிக்கட்டப் பணி - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு 


கோவில்பட்டியில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வுக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டசபை தொகுதிகளில் உள்ள 808 ஓட்டுச் சாவடிகளுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதை எதிர்கொள்வதற்காக எல்லா கட்சிகளும் பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்கும் குழு என விறுவிறுப்பு காட்டி வருகின்றன. 


தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தேர்தல் பணியில் முனைப்பு காட்டு வருகின்றன. ஆளும் கட்சியான தி.மு.க., பூத் கமிட்டியை அமைத்து தலைமைக்கு அனுப்பி விட்டது. 

அ.தி.மு.க., பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. அதிலும், 19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கவேண்டும். அதில், 7 பேர் போட்டோ, ஆதார் எண், செல்போன் நம்பர் பெற்று பூத் கமிட்டி அமைக்கப்படவேண்டும். இந்த பூத் கமிட்டியில், 5 பேர் இளைஞர், இளைஞிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

ஐ.டி விங்கிலிருந்து 2 பேர் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்று அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதால் அதற்கு தகுந்தவாறு பூத் கமிட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 


சட்டசபை தொகுதிகளான கோவில்பட்டியில் 286 ஓட்டுச்சாவடிகள், விளாத்திகுளத்தில் 260 ஓட்டுச்சாவடிகள், ஓட்டப்பிடாரத்தில் 262 ஓட்டுச் சாவடிகள் என 808 ஓட்டுச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகிறார்கள். 


துாத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கான பூத் கமிட்டி இறுதி செய்யும் பணி கோவில்பட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதை துாத்துக்குடி வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொருப்பாளரும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட்டனர். 

அவர்களுடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், லெட்சுமணபெருமாள் , கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Previous Post Next Post