ஈரோடு மாவட்டம் டி. என். பாளையம் ஒன்றியம் யூனியன் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தொடர் நடைபெற்றது

 ஈரோடு மாவட்டம் டி. என். பாளையம் ஒன்றியம் யூனியன் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தொடர் நடைபெற்றது.

கூட்டமானது ஒன்றிய குழு தலைவர் விஜயலக்ஷ்மி (10வது வார்டு )தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா முன்னிலையில் நடைபெற்றது.யூனியனில் உள்ள 10 கவுன்சிலர்களில் தலைவர், துணை தலைவர் மற்றும் அதிமுகவை சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் நடராஜ், 6 வது வார்டு கவுன்சிலர் ராதாமணி,  7வது வார்டு திமுக கவுன்சிலர் கஸ்தூரி உட்பட ஐந்து பேர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு வகையான தீர்மானங்கள் வாசிக்க பட்டு ஒப்புதல் அளித்தனர். கூட்ட முடிவில் அதிமுக கவுன்சிலர்கள்,தொடர்ந்து மூன்று முறை கூட்டத்திற்கு வராதவர்கள் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாவது , கூட்டத்திற்கு வராதவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து காரணம் கேட்கப்படும். முறையான பதில் கொடுக்காதவர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அவர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Previous Post Next Post