இதனால் தமிழக மக்களுக்கு ஏதேனும் நண்மையுண்டா?
இதனால் அரசு என்ன சாதிக்கப்போகிறது?
பருவ மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய இக்கூட்டமா?
நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை சீரமைக்க இக்கூட்டமா?
நகரங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிசெய்ய இக்கூட்டமா?
சாலை விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற அதை பற்றி விவாதிக்க இக்கூட்டமா?
மழை & வறட்சி காலங்களில் விவசாயிகள் படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட இக்கூட்டமா?
ஏற்றமாட்டோம் என சொல்லிவிட்டு வரிகளை ஏற்றிய தமிழக அரசு மக்களுக்கு ஏதெனும் வரியை குறைக்க இக்கூட்டமா?
பின் இக்கூட்டம் எதற்காக?
ஆளுனர் துனைவேந்தர்களை நியமிக்க கூடாது என்பதற்காக பல்கலைகழகங்களில் வேந்தராக தமிழக முதல்வர் செயல்பட வகைசெய்யும் மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்டார். அதை மீண்டும் நிறைவேற்ற இக்கூட்டமாம்.
அதுமட்டுமல்ல, கூட்டுறவின் தத்துவத்தையே கெடுக்கும் வகையில் அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கூட்டுறவு சங்கங்களை கலைக்கும் மசோதாவையும் ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளதால் அதையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் அனுப்ப போகிறார்களாம்.
இதுதான் திமுகவின் ஜனநாயகமா?
கல்வியில் அரசியல் தலையீடு கூடாது என்பவர்கள் துணைவேந்தர்களை நியமிக்க இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?
தமக்கு புடிக்காதவர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்தால் உடனடியாக கலைத்து தனது ஆதரவாளர்களை அதன் பிரதிநிதியாக கொண்டுவருவதன் மூலம் ஊழலும் முறைகேடுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதைபோலவே தமிழகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துனைவேந்தர்கள் ஊழல் முறைகேடுகளால் கைது செய்யப்பட்ட வரலாறு உண்டு.
1995இல் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வர் செயல்பட வகை செய்யும் மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் பேசியது அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் (காங்கிரஸ்) உங்கள் கூட்டணி கட்சிக்காரர்
1994 ஜனவரி 5ஆம் தேதி
தமிழக சட்டமன்றத்தில் அதிமுக நிறைவேற்றிய முதலமைச்சருக்கான வேந்தர் அதிகாரத்தை
1996 ஜூன் திரும்ப பெற்றது யார்?
திமுகவின் அன்றைய பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் மறைந்த க அன்பழகன் அவர்கள்
ஆக இந்த சட்டத்தை கருணாநிதி தேவையற்றது என்றால் அன்பழகன் வாபஸ் பெற்றார்
மறுபடியும் ஸ்டாலின் கொண்டு வருவதன் நோக்கம் என்ன? பையை நிறப்புகின்றது
பெட்டிகள் கைமாற வைப்பது என்பது தானோ?
வெளிப்படைதன்மை கொண்ட துணைவேந்தர் நியமனத்தால் லாபம் மாணவர்களுக்கே.
மாணவச்செல்வங்கள் பயனடையத் தேவையில்லை, கல்வித்தந்தைகள் பலன்பெற்றால் போதும் என அரசு நினைக்கிறது போலும்
அதனால்தான் இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டமோ? என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்