ஆம்னி பேருந்துகள் கத்திப்பாராவில் நிற்காது.. பரங்கிமலை போலீசார் அறிவிப்பு

 தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கத்திபாராவில் நிற்காது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை

பண்டிகை காலங்கள் வந்தாலே சென்னையில் வசிக்கும் தெமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வரும் ஞாயிறு தீபாவளி என்பதால் தமிழக அரசு அதற்கு மறுநாள் திங்கள்கிழமையும் விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்

இதனை தொடர்ந்து சென்னையின் முக்கியமான பகுதியான கத்திபாரா எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படுகிறது. பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது இன்னும் அதிகமாகவே இருக்கு

இதற்காக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார், ’இனி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கத்திப்பாரா சந்திப்பில் நிற்காது எனவும் அதற்கு மாற்று இடமாக ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள ரிங் ரோட்டில் நின்று செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிண்டி கத்திபாராவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம் எனவும் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைந்து செல்லமுடியும் எனவும் தெரிவித்தனர்

Previous Post Next Post