"சென்னையில் மழை என்றதும் வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னையில் மழை என்றதும் வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்! அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்ற வேண்டும் மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் (அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!