காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு எக்ஸ் (ட்விட்டர்) தள வருவாய் நன்கொடையாக வழங்கப்படும் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு


 காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு எக்ஸ் (ட்விட்டர்) தள வருவாய் நன்கொடையாக வழங்கப்படும் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) அதன் விளம்பர வருவாயை,  போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் அதன் விளம்பர வருவாயை,  போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.

விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்/கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்" என எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கும், காஸாவை ஆளும் ஹமாஸுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

மேலும், காசாவின் மிகப்பெரிய அல் ஷிஃபா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள் இல்லாமல் செயலிழந்து உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கீழ் சுரங்கம் அமைத்து ஹமாஸ் தலைமை செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அதனை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் எலான் மஸ்க், காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உதவி நிறுவனங்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் இணையம் துண்டிக்கப்பட்ட பிறகு இணைப்பை ஸ்டார்லிங் செயற்கைக்கோள் வழங்கும் என்று அறிவித்திருந்தார்.

ஸ்டார்லிங்க் என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக மஸ்க்கின் விண்வெளி விமான நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பாகும். ஒரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தோராயமாக ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் சுமார் 42,000 செயற்கைக்கோள்களைக் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

Previous Post Next Post