பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் திடீர் பதவி நீக்கம்.!- ரிஷி சுனக் நடவடிக்கை.!
லண்டன்: பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவரை பதவி நீக்கம் செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் காசா முனையிலுள்ள அப்பாவி குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஈவு இரக்கமின்றி இஸ்ரேல் கொன்று வருகிறது. இது வரை சுமார் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களை குண்டு வீசி கொடூரமாக கொன்று குவித்துள்ளது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் இதனை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில்பிரிட்டனிலும், கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையானது.
காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்கள் வெறுப்பு எண்ணங்களை கொண்டவர்கள் என்றும், அப்படிப்பட்ட போராட்டக்காரர்களான "பாலஸ்தீனிய சார்பு கும்பல்கள்" சட்டத்தை மீறுவதை லண்டன் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் சுயெல்லா பிரேவர்மேன் கூறி இருந்தார்.
பிரேவர்மேனின் இந்த கருத்துக்களுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து, வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டன் தெருக்களில் இறங்கி சுயெல்லா பிரேவர்மேனுக்கு எதிராக போராட தொடங்கினர்.
பிரேவர்மேனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பலரும் அவருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இருப்பினும், கண்டனங்கள் அதிகரித்த நிலையில், வேறு வழியில்லாமல் இப்போது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அழுத்தம் அதிகரித்த நிலையில், பிரிட்டன் அமைச்சரவையில் ரிஷி சுனக் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.