சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தாக பயணம் மேற்கொள்வது தொடர்கதையானது. சென்னை மாநகர பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் சில மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்தனர். பள்ளி சீருடையுடன் பயணித்த மாணவர்கள் தங்கள் உயிர் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த ஒரு பெண், பஸ்சை நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் இவ்வளவு பேர் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியே பஸ் ஓட்டுகிறாயா? அறிவில்லையா? என்று டிரைவரை திட்டினார்.
மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருந்த மாணவர்களை மண்டையில் நாலு போடு போட்டு அறிவில்லை.. இனி தொங்குவியா என்று கேட்டு வலுக்கட்டாயமாக பஸ்சை விட்டு இறக்கி விட்டார்.
இதில் வரமறுத்த மாணவர்கள் சிலரை லெஃப்ட் & ரைட் வாங்கியதுடன், மாணவர்களை எச்சரிக்காத ஓட்டுநர், நடத்துனரையும் சரமாரியாக திட்டித் தீர்த்தார். இறங்குடா நாய்... அறிவுகெட்ட நாய் என்று அவர் திட்டியதை கேட்டு பள்ளி மாணவர்கள் பம்மினார்கள்.
கீழே இறங்கி சென்றார்கள்.
பல பேர் மாணவர்கள் தொங்குவதை பார்த்து கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் காலத்தில், அவர்களது நலனுக்காக களத்த்தில் இறங்கி வெளுத்து வாங்கிய அந்த பெண்ணை பலரும் பாராட்டுகிறார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ டிரெண்டிங் ஆகி வருகிறது.
யாரோ பெத்த பிள்ளை தானே பஸ்சில் தொங்குது என்று நினைக்காமல் தன் பிள்ளையாக நினைத்து பெற்றோர்களும் இதே போல பிள்ளைகளை முறைப்படுத்தினால் உயிரிழப்பு தவிர்க்கப்படும் தானே..
அதே நேரம் போலீஸ் என்று கூறிக்கொண்டு மாணவர்களை தாக்கிய அந்த பெண்ணை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். அவர் நடிகை ரஞ்சனா நாச்சியார் என்று தெரிய வந்துள்ளது.
ஒரு தர்ப்பினர் பாராட்டும் வேளையில், இன்னொரு தரப்பினர் மாணவர்களை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நடிகை ரஞ்சனா நாச்சியார் போலீஸ் என்று கூறிக்கொண்டு மாணவர்களை அடித்ததாகவும், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை திட்டியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.