கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள இரயில்வே சுரங்கப்பாதை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வில் முக்கிய முடிவு.!


 கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள இரயில்வே சுரங்கப்பாதை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வில் முக்கிய முடிவு.!


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் 08.11.2023 அன்று மாலை 06.00 மணியளவில் பெய்த பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த தனியார் பேருந்து சிக்கிய தகவல் உடனடியாக கிடைக்கப் பெற்று உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு பேருந்தில் பயணித்த 28 நபர்களையும் பத்திரமாக மீட்டனர். பேருந்தும் JCB மூலம் மீட்கப்பட்டது.


இந்நிகழ்வு தொடர்பாக 09.11.2023 அன்று காலையில் மேற்குறிப்பிட்ட மழைநீர் தேங்கிய சுரங்கப் பாதை, மாவட்ட ஆட்சித் தலைவரால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது கோவில்பட்டி நகராட்சி மன்றத்தலைவர், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சிப் பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர். கள ஆய்வின் போது சுரங்கப்பாதை, சாலைகள், பம்பிங்க் நிலையம், நீரைவெளியேற்றும் மோட்டார் பம்புகள் ஆகியவை பார்வையிடப்பட்டன.



கள ஆய்வு முடிந்தவுடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இந்நிகழ்வு தொடர்பாக இதர துறை அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு துறையினருக்கும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி மற்றும் காலஅளவு நிர்ணயம் செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டது. 


கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது.


சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரின் அளவை கண்காணித்து தேங்கும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அதிக சக்தி கொண்ட மோட்டார்கள் மூலம் இடைவெளியின்றி நீரை வெளியேற்ற வேண்டும். 


சுரங்கப்பாதையில் தேங்கும் அதிகளவு நீரை கண்டு உணர நெடுஞ்சாலைத்துறை, கோட்டப்பொறியாளர் அபாயகரமான நீர்மட்ட அளவை குறியீடு செய்ய வேண்டும்.


மழைநீர் தேங்கினால் சுரங்கப்பாதையில் வேறு வாகனங்கள் நுழையாதவாறு காவல்துறையினர் இருபுறமும் தடுப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும். சுரங்கப்பாதையின் அருகே போக்குவரத்துக்காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும்.


மற்றும் கோவில்பட்டி நகராட்சியினர் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள மணலை அகற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் சரியான சரிவை அமைக்க வேண்டும்.


கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கோவில்பட்டியில் உள்ள இதர மூன்று

இரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் கோவில்பட்டி நகராட்சியினர் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள மணலை அகற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் சரியான சரிவை அமைக்க வேண்டும்.


கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் இத்தகைய இடர்களின் போது அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.


நெடுஞ்சாலைத்துறையினர் அணுகுசாலை விரிவாக்கப் பணிகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து ஜீன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சட்ட ரீதியான தடை ஏதுமின்றி பணிகள் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.


கோவில்பட்டி காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருடன் இணைந்து வீடுகளின்றி தெருக்கள் மற்றும் பாலங்களின் அடியில் வாழும் நபர்களை அரசு உதவி பெறும் முதியோர் இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அனைத்து வட்டாட்சியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுரங்கப்பாதையில் அபாயகர அளவு குறியீட்டிற்கு மேல் மழைநீர் தேங்கும் போது எவ்வித வாகனங்களும் சுரங்கப்பாதையினுள் செல்லக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


கூட்டத்தில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், துணை காவல்

கண்காணிப்பாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர்,

தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மற்றும் தூத்துக்குடி தீ மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post