தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் சுமார் நள்ளிரவு 2 மணி வரை மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட சில்வர்புரம், வள்ளிநாயகபுரம் ஆகிய பகுதிகளில் பகுதிகளிலும், மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகரிலும்
அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டக் செயலாளர் பொன்னுச்சாமி, வட்ட செயலாளர் திரு.காளிதுரை,மாமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.