வடக்கனுகளுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு ஸ்பெஷல் ரயில்... வத.. வத... கூட்டத்துக்கு இது போதுமா? மனசாட்சியே இல்லையா ரயில்வே ஆபீசர்ஸ்?

 திருப்பூர், கோவையில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வரும் 16 மற்றும் 21 தேதிகளில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகரில் சுமார் இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் சுமார ஒன்றரை லட்சம் பேர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள். தீபாவளி மற்றும் சாத் பூஜா என்கிற வடமாநில பண்டிகை வரும் நிலையில், திருப்பூரில் கடந்த 2 நாட்களாக வடமாநிலங்கள் செல்கின்ற ரயில்களில் கூட்டம் பிதுங்கி வழிந்து வருகிறது. 

திருப்பூரில் இருந்தோ, கோவையில் இருந்தோ ரயில்கள் கிளம்பாத நிலையில், கேரள மாநிலமான திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூரில் நின்று செல்லும் ரயில்களை தான் திருப்பூர் வாழ் வடமாநில தொழிலாளர் நம்பி உள்ளனர். ஆனால் இந்த ரயில்கள் இங்கு வரும்போதே முழுமையாக நிறைந்து வருகிறது. நிற்க கூட இடம் இல்லாமல் வரக்கூடிய வடமாநில ரயில்களில் கோவை, திருப்பூரில் இருந்தும் வடமாநிலம் நோக்கி செல்லக் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறுகிறார்கள். 

அவர்கள் தங்கள் உடலை உள்ளே திணித்தால் போதும் என்று ரயில்களில் ஏறிச் செல்லும் கொடுமையான காட்சிகளை ரயில் தோறும் காண முடிகிறது. ஆனாலும் ரயில்வே நிர்வாகம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது. பெயரளவுக்கு ஓரிரு சிறப்பு ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது.

அந்த வகையில், சாத் பூஜா பண்டிகை கொண்டாட ஏதுவாக கோவை, போத்தனூரில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வருகிற 14 ஆம் தேதி மற்றும் 21 ம் தேதி ஆகிய இரண்டு செவ்வாய்கிழமையும் காலை 11.50 மணிக்கு கோவை ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் இரண்டு நாள் பயணத்துக்கு பிறகு வியாழக்கிழமையில் மதியம் 1 மணிக்கு பரவுணி ரயில் நிலையத்தை அடையும். 


இந்த சிறப்பு ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் ஆகும். 

காலை 11.50க்கு கோவை ஜங்க்சனில் கிளம்புகிற சிறப்பு ரயிலானது (வண்டி எண்: 06059) , மதியம் 12.10 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம், மதியம் 1.35 மணிக்கு ஈரோடு ஜங்சன், மதியம் 2.47 க்கு சேலம் ஜங்சன், மாலை 4.45க்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நிற்கிறது. 

அதே போல மறு மார்க்கமாக வருகிற 16 ம் தேதியு,ம், 23ம் தேதியும் என வியாழக்கிழமை நாளில் பரவுணியில் இருந்து இந்த சிறப்பு ரயில் திரும்ப கிளம்புகிறது. (வண்டி எண்: 06060) 

இந்த ரயிலில் 15 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதால் பெருமளவு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டுமே தீபாவளி மற்றும் சாத் பூஜை  வாரத்தில் திருப்பூரில் இருந்து ஒன்றரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களும், கோவையில் இருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். 

ரயில்களில் முன்பதிவு பெட்டியில் ஏறிய வடக்கத்திய மக்களுக்கு அபராதம் போட்டு ரசீதும் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடவசதி மட்டும் செய்து தருவதில்லை. உள்ளே ஏறினால் போதும் என வடக்கன்களும் கிடைக்கும் இடங்களை எல்லாம் ஆக்கிரமிக்கிறார்கள். இடம் இல்லாமல் கழிவறை நாற்றத்திலும், கால்களுக்கு அடியிலும் முடங்கிக் கொண்டு சுகாதாரம் இல்லாமல் பயணம் மேற்கொள்கிறார்கள். 

இவர்க்ள் செல்லும் ரயில்களை பற்றி அறியாமல் முன்பதிவு செய்த தமிழ்நாட்டு பயணிகள் படும் நரக வேதனை சொல்லி மாளாது. வடமாநில தொழிலாளர்கள் நிலையும் வேதனைக்குரியதாகவே இருக்கிறது.

எனவே அவர்களின் பயணிக்கும் எண்ணிக்கை அடிப்படையில் பண்டிகை வாரங்களில் தினசரி கோவை, திருப்பூரில் இருந்து கிளம்பும் விதமாக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, உ.பி., மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை விட வேண்டும் என்பது புலம்பெயர் தொழிலாளர்களின் தொடர் கோரிக்கையாகவே உள்ளது. 

மலையளவு தேவை இருக்கும் போது, மடு அளவுக்கு இரண்டு ரயில்களை மட்டுமே இயக்கி உள்ள ரயில்வே நிர்வாகம் பயணிகளின் எண்ணிக்கையை முறையாக கருத்தில் கொண்டு ரயில் விடுவது தானே சரியாக இருக்கும். ஏகத்துக்கும் சாதாரண டிக்கெட் கொடுத்து விடுகிறார்கள். 

Previous Post Next Post