ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம், வேம்பத்தி ஆகிய ஊராட்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி..வெங்கடாசலம் எம்எல்.ஏ.தலைமையில் நடந்தது.வருகின்ற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு,பிரம்மதேசம், வேம்பத்தி ஆகிய ஊராட்சியில் இருந்து கழக இளைஞர் அணி மாநாட்டிற்கு இளைஞர்களை பெருந்திரளாக கலந்து கொள்ள செய்வது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் குறித்த பணிகளில் கழக நிர்வாகிகள் ஈடுபடுவது குறித்தும்,கழக இளைஞர் அணி, மகளிர் அணி உறுப்பினர் சேர்த்தல் குறித்தும், ஆலோசனை வழங்கினார்.உடன்விவசாய அணி துணை அமைப்பாளர் விவேகம் பாலுச்சாமி,தொண்டர் அணி துணை அமைப்பாளர் சண்முகம்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் மாணிக்கம்,பிரம்மதேசம் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா, உள்ளிட்ட கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.