தாம்பரம் : பருவ மழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

 தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டல அலுவலகத்தில்  பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்து கொண்டு தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். 


பல்லாவரம் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். ஓவ்வொரு வார்டுக்கும் சுகாதார துறை ஆய்வாளர்கள் நியமனம் செய்து அவர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டும் மணடல அலுவலக சிறப்பு டோல் ஃப்ரி எண்கள் கொடுக்கபட்டன. மேலும் சங்கர்நகர், நியூகாலனி, ஏழுமலை தெரு உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வலியுறுத்தபட்டது.மேலும் சாலையில் சாய்ந்து படர்ந்திருக்கும் மரகிளைகளை அகற்றுமாறு கேட்டுகொண்டனர். மூம்மூர்த்தி நகர் பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், கால்வாய்களில் தூர்வாரவும் கேட்டுகொண்டனர். பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்மோட்டார் , நீரை அப்புறபடுத்தும் குழாய், நீர்தேக்க கரைகள் உடைபட்டால் அவசரகால மண் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கபட்டுள்ன. மேலும் மண்டலத்தில் உள்ள ஓவ்வொரு துறை அதிகாரிகளையும் எச்சரிக்கையுடன் இருக்குமாரு உத்தரவிட்டார் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி.இதில் மண்டல அலுவலக ஆணையாளர் மாரிச்செல்வி, மேலாளர் ராஜீ, உதவி பொறியாளர் பிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post