திருவாரூரில் வெண்டிலேட்டரில் சிகிச்சை இருந்த பெண் பவர் கட் காரணமாக உயிரிழக்க வில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 லட்சமாவது பயனாளியை அமைச்சர் மா.சுப்பிரமனியன் நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கி நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து புதிய காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு புதிய காபீட்டு அட்டைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- சாலை விபத்தில் சிக்கிய நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் வழங்கப்பட்டு அவர்களுக்கு இன்னுயிர் காக்கப்பட்டு வந்தது. அதன்படி இன்று 2 லட்சமாவது பயனாளிகள் இன்று பயன் பெற்றுள்ளனர். 2021 டிசம்பர் மாதம் முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை விபத்திற்குள்ளானவர்களை மீட்பதே பெரிய பணியாக இருந்தது. ஆனால் தற்போது விபத்துள்ளானவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் நபர்களுக்கே 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. 173 கோடியே 73 லட்சம் செலவில் இன்று 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 854 அரசு மருத்துவமனைகள் மற்றும் 975 தனியார் மருத்துவமனைகளில ஒரு கோடியே 44 லட்சம் பேருக்கு காப்பீட்டு திட்டத்தின் பயனபெறுகின்றனர். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு 1400 கோடி ரூபாய் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புதியதாக காப்பீட்டு திட்டத்தில் சேர நினைப்பவர்கள் 2 தேதி 100 முகாம்கள் நடத்தப்பட்டு காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. டெங்குவால் தமிழகத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை குறித்த கேள்விக்கு,
நாட்டு நடப்பை பற்றி தெரியாத ஒருவர் எதிர்கட்சி தலைவரா உள்ளார் என கிண்டலடித்து பதிலளித்த அமைச்சர், கடந்த 5 வாரங்களில் தொடர்ந்து டெங்கு முகாம் நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30ம் தேதி வரை 5 வாரமும் டெங்கு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை கூட சரியாக சொல்லமுடியாமல் 9 பேர் என எதிர்கட்சி தலைவர் கூறுகின்றனர். எடப்பாடி முதல்வராக இருக்கும்போது 22 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தனர்.
அதிமுக ஆட்சியின் போது தான் அதிகமாக டெங்குவால் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிமுகவை குற்றம்சாட்டினார்.