தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி.! - நண்பருடன் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்த போது விபரீதம்.!
தூத்துக்குடி கே.வி.கே., நகரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்து லட்சுமணன் (18). இவர் நேற்று எட்டையாபுரம் ரோட்டில் உள்ள டீக்கடை முன்பு தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அந்த கம்பத்தில் மின் கசிவு இருந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்