வாக்காளர் சேர்க்கை முகாமிற்கான தேதி மாற்றம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!


 வாக்காளர் சேர்க்கை முகாமிற்கான தேதி மாற்றம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை முகாமிற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணியானது 27-10-2023 முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்,; 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்று கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்று கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள், இந்திய தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்பட உத்தரவிடப்பட்டதின் அடிப்படையில், மேலும், 4-11-2023 மற்றும் 5-11-2023 ஆகிய தினங்களில், இரு சிறப்பு முகாம்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய நாட்களில், மேலும், இரு சிறப்பு முகாம்கள் நடைபெற இருந்தது.

தமிழக அரசால் தீபாவளி விடுமுறையை ஈடுசெய்ய 18.11.2023 அன்று வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளதின் காரணமாக, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள 1622 வாக்குச்சாவடிகளிலும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்ததிற்கான படிவங்கள் படிவம்-6 - புதிய வாக்காளராக பதிவு செய்வதற்கு (ஜனவரி1,2024 அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தியாகியிருந்தால்), படிவம் -6 ஏ - வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, படிவம்-6 பி - வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு, படிவம் 7 - பெயரினை நீக்கம் செய்வதற்கு (இறப்பு/இரட்டைபதிவு), படிவம் 8 - முகவரி மாற்றம்(ஒரே தொகுதிக்குள் மற்றும் தொகுதி மாற்றத்திற்கு), வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழை இருப்பின் பதிவுகளை திருத்தம் செய்வதற்கு/நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு/மாற்றுத்திறனாளி வகைபாட்டினை பதிவு செய்வதற்கு அளிக்கலாம்.

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் வாக்குசாவடி அமைவிடங்களில், மேற்கண்ட தினங்களில், மேற்கண்ட படிவங்கள் அளித்து பலன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நமது மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு 73.31% பதிவாகி உள்ளது. இளம் வாக்காளர்கள் பதிவும் குறைவாக உள்ளது. எனவே படிவம் 6பி பெற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணிணை இணைத்திடவும் படிவம் 6 பெற்று புதிய வாக்காளராக பதிவு செய்திடவும் படிவங்கள் பெற்று பலன் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline App என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post