ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!


 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!


திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களைத் தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை வழக்குகள் தாக்கல் செய்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்..


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.அதிர்ஷ்டத்துக்கான நீதிபதிகள் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என  நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Previous Post Next Post