ஒரு நாள் போட்டிகளில் அதுவும் உலகக்கோப்பை போட்டிகளில் மேக்ஸ்வெல் போல் இன்னொருவர் சாதனை நடத்த முடியுமா என்று வியப்புதான் மேலோங்குகிறது - இன்னமும் நம்ப முடியவில்லை.!!


 ஒரு நாள் போட்டிகளில் அதுவும் உலகக்கோப்பை போட்டிகளில் மேக்ஸ்வெல் போல் இன்னொருவர் சாதனை நடத்த முடியுமா என்று வியப்புதான் மேலோங்குகிறது - இன்னமும் நம்ப முடியவில்லை.!!


கிரிக்கெட் பாக்கற வழக்கமெல்லாம் 25 வருஷத்துக்கு முன்னாடியே  ஒழிஞ்சு போச்சு.. 


வீட்டுக்கு வந்திருந்த நண்பர்களால் வேறு வழியில்லாமல் பார்க்க நேரிட்டது.


உண்மையிலேயே எந்த டீம்ல யார் யாரெல்லாம் விளையாடறாங்கன்னு தெரியாது.


நாம் செல்போனை நோண்டிக் கொண்டிருக்க, நண்பர்கள் வெறிகொண்டு பார்க்க பார்க்க  அப்படி என்னதான் இந்த மேட்சில் இருக்கிறது என லேசாக பார்க்க ஆரம்பித்தோம்.


91-க்கு ஏழு விக்கெட் இழந்துவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா எளிதில் தோற்று விடும் என்கிற நிலைமை.


அந்த இக்கெட்டான நிலையில் தான் ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், செஞ்சுரி போடுகிறார். அப்படியும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் ஆஸ்திரேலியாவால் கண்டிப்பாக ஜெயிக்கவே முடியாது என்றே பலரும் முடிவு கட்டி விட்டார்கள்.


இதை இன்னும் உறுதி செய்வதுபோல் மேக்ஸ்வெல்க்கு திடீரென்று காலில் பலத்த அடி.


அப்போதுதான் நமக்கு ஒரு விஷயத்தை சொன்னார்கள். இந்த உலகக் கோப்பையில் ரன்னர் வைத்துக் கொள்ள முடியாதாம். காயம் அடைந்தவர் உள்ளே சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்து மறுபடியும் ஆடவும் முடியாதாம்.


ரன் ஓடவே முடியாத நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டத்தை தொடர்கிறார். இரண்டு ரன்கள் எடுக்க முடியும் என்றாலும் அதற்கு கூட அவர் முயற்சிக்கவில்லை.


அதனால் நின்ற இடத்தில் இருந்து ஃபோரோ அல்லது சிக்ஸரோ மட்டுமே அடிக்க முடியும். 


ஒன்றிரண்டு 6, 4 அடித்தாலும் கண்டிப்பாக நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தோம்.


மேக்ஸ்வெல் 128 ரன்கள் எடுத்திருந்தபோது அவருடன் ஆடிக் கொண்டிருந்த இன்னொருவர் வெறும் 11 ரன்கள் எடுத்திருந்தார்.


ஆனால் மேக்ஸ்வெல் நின்ற இடத்திலேயே ஃபோரும் சிக்ஸரும் என கையில் பிடித்துப் பந்தை அடிக்காத குறையாய் துவைத்து எடுத்தார்.


201 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் ஆஸ்திரேலியாவை  வெற்றி பெறவும் செய்தார்.


மேக்ஸ்வெல் 70 ரன்கள் எடுக்கும் நேரத்தில் இன்னொரு ஆட்டக்காரர் வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து பக்க பலமாக தூண் போல் நின்று கொண்டிருந்தார். 


மொத்தத்தில் என்ன நடந்தது எப்படி நடந்தது என்று புரியவில்லை.


நகர முடியாமல் நின்று ஆடும் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏன் அல்வாக்களை போல் பந்துகளை போட்டார்கள் என்பதும் புதிர்போல் உள்ளது.


எல்லா சந்தேகங்களையும் அப்பால் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், மேக்ஸ்வெல் என்ற தனி மனிதருக்கும் ஆப்கானிஸ்தான் என்ற ஒட்டுமொத்த டீமுக்கும் நடந்த போட்டி போல இருந்தது.


ஒரு நாள் போட்டிகளில் அதுவும் உலகக்கோப்பை போட்டிகளில் மேக்ஸ்வெல் போல் இன்னொருவர் சாதனை நடத்த முடியுமா என்று வியப்புதான் மேலோங்குகிறது.


போட்டியை பார்த்த அல்லது கேள்விப்பட்ட எல்லோருமே சொல்வது ஒன்றுதான், "எத்தனையோ ஆண்டுகாலம், எவ்வளவோ போட்டிகளை பார்த்திருக்கிறேன், இது மாதிரி ஒரு தனிமனிதப் போராட்டத்தை பார்த்ததே இல்லை"


மேக்ஸ்வெல் வெட்டும் வெல்லவில்லை, கிரிக்கெட்டும் சேர்த்தே நேற்று வென்றது


- ஏழுமலை வெங்கடேசன்

மூத்த பத்திரிகையாளரின் முக நூல் பக்கத்திலிருந்து

Previous Post Next Post