தணிக்கை வார விழா கொண்டாட்டமாக தணிக்கை மற்றும் கணக்குத்துறை சார்பாக சைக்கிள் பேரணி அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை வார விழா இந்தியா முழுவதும் உள்ள தணிக்கை அலுவலகங்களில் கொண்டாடபடுகிறது.
அந்த வகையில் சென்னையில் நவம்பர் 19 முதல் 22 வரை தணிக்கை வார விழா-23 கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை மற்றும் கணக்கு துறை பிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவர்களுக்கான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
25 கிலோமீட்டர் தொலைவிற்கான சைக்கிள் பேரணியில் 120க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக மேடையில் பேசிய அவர்,1860 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து தணிக்கை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. அனைத்து சென்னை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது.மிதிவண்டி பயணம் காலையில் செய்வது தான் நல்லது.
8760 மணி நேரத்தில் 500 மணி நேரம் எனக்காக ஒதுக்கி உடற்பயிற்சியாக நடக்க ஓட முடிவு எடுத்தேன். ஒரு வருடம் முழுக்க 500 மணி நேரம் முடிவு எடுத்தேன் நவம்பரிலேயே 500 வர போகிறது.
அடுத்த ஆண்டு 4000 கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்று குறிக்கோள் வைக்க உள்ளேன்.
இதய நோய் மாரடைப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். தமிழக மாநில அரசும் முதல் முறையாக இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம்.
அகில உலக மருத்துவ மாநாடு ஜனவரி 3 ஆம் தேதி தமிழகத்தில் நடத்த உள்ளோம். உலகில் உள்ள சிறந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 3 நாட்கள் நடக்க உள்ளது , மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்தியாவில் முதல் சர்வதேச மருத்துவ மாநாடாக இது இருக்கும். சமீபத்தில் கூட 8 கிலோ மீட்டர் நடக்கும் ஹெல்த் வாக் திட்டம் தொடங்கப்பட்டது என்றார்.