நன்மங்கலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்... பொதுமக்கள் அவதி

 கனமழை பெய்ததால் நன்மங்கலம் ஊராட்சி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர், வரி வசூல் செய்யும் ஊராட்சியில் அடிபடை வசதி செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு

சென்னை சோழிங்கநல்லூர் நன்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு அண்ணா தெரு, பொன்னியம்மன் நகர் பகுதிகளில் கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் தேங்கிய மழைநீரில் நச்சு தன்மை கொண்ட பாம்பு, தேள், பூரான் போன்றவற்றின் அச்சுறுத்தல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். 

மேலும் எங்கள் பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு, கால்வாய் வசதி செய்து தரவில்லை எனவும் மழைகாலங்களில் வீடுகளுக்கு செல்ல நீந்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் எங்கள் பகுதியில் நன்மங்கலம் ஊராட்சி தலைவர் கிரி அவர்கள் எட்டி கூட பார்பதில்லை என ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர்.தமிழக அரசு வழங்கி அவசர உதவி எண்னை அழைத்தாலும் வந்து உடனே பார்பதாக பதில் மட்டுமே வருகிறது ஆனால் இதுவரை யாரும் வரவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 9 வது வார்டு பகுதியில் உள்ள அனைவரும் வீட்டு வரி கட்டி வருவதாகவும் ஆனால் அடிபடை வசதியான சாலை, மின்விளக்கு, கால்வாய் வசதிகள் செய்துதரபடவில்லை எனவும் மழைநீர் நாங்கள் குழங்களுடன் வெளியே செல்வதற்கோ முடியாமல் அவதிபடுகிறோம் எனவும் எங்கள் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் யாரும் எங்கள் பகுதி வந்து பார்பதில்லை என்றும் தமிழக அரசு உடனடியாக மழைநீரை அப்புறபடுத்து எங்கள் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post Next Post