மயிலாடுதுறை துலாக்காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்குவோம் !* *பக்தர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அழைப்பு !

*மயிலாடுதுறை துலாக்காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்குவோம் !* *பக்தர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அழைப்பு !*   கங்கை நதி தன்மீது மக்கள் இறக்கி வைத்த பாவங்களை  போக்க சிவபெருமானிடம் வேண்டிய பொழுது, ஐப்பசி மாதத்தில் தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் மயிலாடுதுறை நகரின் நடுவில் பாய்கின்ற காவேரி துலா கட்டத்தில் புனித நீராடுகின்ற பொழுது உனது பாவங்கள் அனைத்தும் போக்கப்படும் என்று வரம் அளித்தார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் துலா உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட படாததால் கடந்த ஒரு மாதமாக மயிலாடுதுறை  காவிரியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. அகில பாரத துறவியர்கள் பேரவை அமைப்பாளர் சுவாமி ராமானந்தா மகாராஜ் தலைமையிலான ஆன்மீக துறவியர் பெருமக்கள் காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து காவிரி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் பகுதிகள் வழியாக தொடர்ந்து தண்ணீர் வேண்டி காவேரி அம்மனுக்கு வழிபாடுகள், ஆரத்தி நடத்தி வந்ததன் விளைவாக இயற்கையாக மழை பொழிந்து கல்லனையில் சேகரமாகி,அதனை மயிலாடுதுறை துலா உற்சவாத்திற்கு திறக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, துலா உற்ச்சவத்திற்கு தேவையான தண்ணீர் தற்பொழுது மயிலாடுதுறை துலாக் கட்டத்தை  முன்கூட்டியே  வந்தடைந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.நதிகளை வழிபடுகின்ற பொழுது நிச்சயம் நதிகள் நம்மை வாழவைத்து காக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. ஆகவே இனியாவது அனைத்து நதிகளையும் போற்றி வணங்கி  பாதுகாப்போம்,நதிகளில் கழிவுகள் கலப்பதை தடுப்போம்,  நாமும்  நவம்பர் 16 வியாழக்கிழமை மதியம் நடைபெறும் மயிலாடுதுறை துலா உற்சவத்தில் பங்கேற்போம், துலா கட்ட காவிரியில் புனித நீராடி நமது  பாவங்களைப் போக்கி கங்கை நதியைப்போல தூய்மையாக பல்லாண்டுகள் மகிழ்வுடன் வாழ்வோம்.வாரீர்!வாரீர்!! என பக்தர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார்.
Previous Post Next Post