காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்விக்கு ராகுல்காந்தியின் பெயரை சொல்லாமல், கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
காங்கிரசில் பிரதமர் வேட்பாளரே அறிவிப்பது கிடையாது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார். முன்பு கூட சோனியா காந்தி தான் பிரதமர் என்று ஊரெல்லாம் சொன்னார்கள். ஆனால் மன்மோகன்சிங் தான் பிரதமரானார். சென்ற தேர்தலில் கூட ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார்.
ஆனால் காங்கிரஸ் aதை தீர்மானமாக நிறைவேற்றவில்லை. ஒரு ஜனநாயக கட்சியாக கூட்டத்தில் தான் அதை தேர்ந்தெடுப்போம் என்றார். இந்தியா கூட்டணியின் பணிகள் 5 மாநில தேர்தலுக்காக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்
வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது இது வணிகர்களை கடுமையாக பாதித்துள்ளது என்றார். மேல 12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது , அதனால் வங்க தேச துணிகள் வரவில்லை ஆனால் பாஜக வரிவிதிக்காததால் வங்க தேச துணிகள் வருகின்றன. மத்திய அரசு இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சீனாவில் இருந்து வருகிற பாலிஸ்டராலும் பிரச்சனை எழுவதாக தெரிவித்த அவர் பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை அதனை உற்பத்தி செய்பவர்கள் அதானி அம்பானி , வேறு யாருக்கும் உற்பத்தி வாய்ப்பு இல்லை இதனால் பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டுகின்றனர் இதனையும் சரி செய்யவேண்டும் என குறிப்பிட்டார் விவசாயத்திற்கு அடுத்த படியாக , நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.மத்திய அரசின் தவறான கொள்கையால் பாதிப்படைந்துள்ளனர் சரி செய்ய வேண்டும். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில் தான் உள்ளது மன்னர் காலத்திலும் மன்னர் கையில் தான் கோவில்கள் இருந்தன. கோவில்கள் அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறந்தது சேகர்பாபு சைவ பழம் போல் தெரிகிறார். 5000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டாமா என கேள்வி எழுப்பினார். ஆளுநர்க்கு மாலைக்கண் நோய் அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை என தெரிவிக்கிறார். சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.
தமிழக முதல்வர் சில நடவடிக்கைகள் தவறாக நடந்தால் திரும்பெறுகிறார் திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது . காவிரியை வைத்து கர்நாடகா பாஜக தமிழக பாஜக அரசியல் செய்கிறார் ஈவிகேஸ் இளங்கோவன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் பேசி சரி செய்வோம். பாஜக எதிர்கட்சி மாநிலத்திலும் , மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காரணமே தவிர வேறு இல்லை ம்கடந்த தேர்தலை காட்டிலும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்போம். தொழிற்சாலைகளில் சோலார் மின் உற்பத்திக்கு வரி விதிப்பது உலகம் முழுவதும் விதிக்கப்படுகிறது , என்னதான் சோலாரிம் மின் உற்பத்தி செய்தாலுக் மின் வாரிய தடங்களை பயன்படுத்துவதால் வரி விதிக்கிறார்கள் என பதில் இறுதிப்போட்டிக்கு நடிகர் நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை. அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயர் இருந்தது அதனை மோடி தன் பெயருக்கு மாற்றி கொண்டார். நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பு இருக்கிறதுவல்லபாய் பட்டேல் பெயரில் இருந்த ஸ்டேடியத்தை புணரமைத்து மோடி பெயரில் மாற்றிக் கொண்டார். இது நில அபகரிப்பு போல ஸ்டேடியம் அபகரிப்பாக உள்ளது. அமலாக்க துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்கு சென்று சோதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் அமலாக்க துறை முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்ன. அமலாக்க துறை பணபறிமாற்றத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்வதில்லை.
அமலாக்க துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட வில்லை என்றால் அவர்மீது தனிப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்க வாய்ப்பு உண்டு. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும். ஆளுநர் வேண்டாம் என்றோ அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம். இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல தமிழ்நாடு ஆளுநருக்கு தான். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது இல்லை. ஜனநாயக கட்சி நாங்கள் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தான் பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும். என தெரிவித்தார்