சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் அமர்பிரசாத் ரெட்டி ஆஜர்...திமுகவிற்கு தோல்வி பயம் என்று பேட்டி

 சென்னை ஆலந்தூரில் உள்ள ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கொடிக்கம்பம்  தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர்

அமர்பிரசாத் ரெட்டி, வினோத் குமார், கன்னியப்பன் உள்ளிட்ட ஆறு பாஜகவினர் ஆஜராகினர்...

பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

பிஜேபி பயிற்சியும் சிறைச்சாலையும் ஒன்று போல் தான் இருக்கும் அது போல் தான் எங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்... வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு எதிராக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு தங்கள் பயத்தை வெளிப்படையாக காட்டுகிறார்கள்...



முதல்வருக்கும் திமுகவிற்கும் தோல்வி பயம் வந்திருக்கிறது..கவர்மெண்ட் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு குறித்து வீடியோ காண்பித்த முதல்வர் துறை ஏன் என் விஷயத்தில் காட்ட தயங்குகிறது..

சிறைச்சாலையினுள் பல்வேறு விதங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்... NHRC கவனத்திற்கு கொண்டு சென்று புழல் சிறைக்கு NHRC கீழ் கொண்டு வரும் வரை விட மாட்டேன்.. சிறைச்சாலையின் உள்ளே மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடக்கிறது..

சிறைச்சாலைகளில் 100% ரேஷன் வழங்கப்பட வேண்டும்... ஆனால் 25 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.. 2,900 கைதிகள் உள்ளே இருக்கிறார்கள்..

ரவுடிசத்தின் ஹப்பாக தமிழ்நாடு மாறி உள்ளது. பிஜேபியின் வளர்ச்சியை தடுக்க நினைத்தால் அதைவிட கோமாளித்தனம் வேறு ஏதும் இல்லை. 40 தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெறும்... என குறிப்பிட்டார்.

Previous Post Next Post