நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சியில் சந்தை அமைந்துள்ளது இச்சந்தையில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் நகராட்சியில் அமைந்துள்ள இறைச்சிக்கடைகளால் வெட்டப்பட்ட இறைச்சி கழிவுகள் தினந்தோறும் நடை பாதையில் வைக்கப்படுவதால் அப்பகுதியில் ரத்தக்கரை ரத்த வாடை என மொத்தத்தில் ரத்த பாதையாக காணப்படுகின்றது உதகை நகராட்சி சந்தை அருகே அமைந்துள்ள நடைபாதையை சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த நடைபாதையில் கடந்து செல்லும்போது கடுமையான துர்நாற்றம் வீசுகிறது இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது இறைச்சிகளின் கழிவுகள் தினம்தோறும் அந்த இடத்தில் வைக்கப்படுவதால் அந்த இடம் தினம்தோறும் நன்றாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும் மேலும் எதிர்காலத்தில் இது போன்ற அப்பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் Dr G.ரஜினிகாந்த் தலைவர் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்