ஈரோடு மாவட்டம் நம்பியூர்அருகே உள்ளகெட்டிச் செவியூர்ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு கெட்டிச் செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் தலைமை தாங்கினார். கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் தூய்மைக்காவலர்கள் 16 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் சிறப்பாக செயலாற்றிய 21 குழுக்களுக்கு பாராட்டிநினைவு பரிசுகள் வழங்கப்பட்டது கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் பொங்கியாத்தாள் வார்டு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி மரகதாள் கருப்புசாமி சுமதி நாகரத்தினம் ராமசாமி குமார் ராதா தெய்வானை சங்கீதா ரேவதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மோகன் குமார் சம்பத்குமார் சோமசுந்தரம் மற்றும்வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய பொறியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.