கோவில்பட்டி: இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.!


 கோவில்பட்டி: இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.


இந்நிலையில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் மழைநீா் சுமாா் 5 அடிக்கு மேல் தேங்கியதையடுத்து அவ்வழியே பயணிகளுடன் சென்ற தனியாா் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.


கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தையும் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியா் லெனின், வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் வந்து பாா்வையிட்டனா். தொடா்ந்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தில் சிக்கி நின்ற தனியாா் பேருந்தில் பயணித்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனா்.


சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதனையடுத்து இனிவரும் காலங்களில் கனமழை பெய்யும் பொழுது  மேற்குறிப்பிட்ட இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காதவண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  கோ.லட்சுமிபதி இன்று 9.11.23 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



இந்த ஆய்வின் போது, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், ஜேன் கிறிஸ்டி பாய் ,கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post