அனகாபுத்தூர் பகுதியில் அரசு நிலம் என கூறி குடியிருப்புகளை அப்புறபடுத்தும் தமிழக அரசை கண்டித்து தீபாவளியை கருப்பு தினமாக கருதி கருப்பு சட்டை அணிந்து கோஷமிட்டவாறு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாந்திநகர், டோபிகான தெரு உள்ளிட்ட பகுதிகள் ஆற்று ஆக்கிரமிப்பு, ஓடை ஆக்கிரப்பு என கூறி குடியிருப்புகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினர்.
இதனை அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த இடம் ஆற்று, ஓடை ஆக்கிரமிப்பு இல்லை என கூறியதால் மீண்டும் இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என கூறி கடந்த நான்கு நாட்களாக குடியிருப்புகளை அகற்றி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் மகாதேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாந்தி நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரகணக்கான மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் குடியிருப்புகளை அகற்ற போவதாக அச்சுறுத்துவதாகவிம், மேலும் இங்கு வாழும் மக்களின் பிள்ளைகள் 400 க்கு மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாக உள்ளது. இவர்களுக்கு மாற்று இடம்கூட தரவில்லை எனவும் இதனால் வேதனை அடைந்த மக்கள் இந்த தீபாவளி பண்டிகையை கருப்பு தினமாக கருதி குடியிருப்பு பகுதி மக்கள் கருப்பு சட்டை, பேட்ஜ் மற்றும் கையில் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டவாறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.