பத்திரிகையாளர் மீது எடப்பாடி தொடுத்த அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு.!


 பத்திரிகையாளர் மீது எடப்பாடி தொடுத்த  அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் ஆகராக எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு.!


பிரபல ஆங்கில பத்திரிகையின் நிருபர்  மேத்யூ சாமுவேல் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வர முடியாது என பழனிசாமி  தெரிவித்துள்ளார்.


2017-ம் ஆண்டு கொடநாடு வழிப்பறி சம்பவத்துடன் தனது பெயரை இணைத்ததற்காக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வர இயலாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 


தான் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதாகவும், எனவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதுநிலை நீதிமன்றத்தில் தாம் ஆஜராகும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளால் வழக்குரைஞர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறிய அவர், வழக்கறிஞர் ஆணையரை நியமிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சாட்சியங்களை பதிவு செய்தார்.

Previous Post Next Post