தூத்துக்குடி: மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.!


 தூத்துக்குடி: மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.!


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  


டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டரங்கில் சுகாதாரத் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, சுகாதாரத் துறையினா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைககள் குறித்துப் பேசினாா். 



மாநகா் பகுதிகளில் தேவையற்ற, பயன்படுத்தாத பொருள்களை தூய்மைப் பணியாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், அரிகணேஷ், ராஜபாண்டி உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.


இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Previous Post Next Post