*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள அவையாம்பாள்புரம் சாலை குளமாகியது! டெங்கு பரவும் அபாயம் உடன் சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை*

*மயிலாடுதுறை  அரசு மருத்துவமனை எதிரிலுள்ள அவையாம்பாள்புரம் சாலை  குளமாகியது! டெங்கு பரவும் அபாயம் உடன் சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை மாவட்டத்தின்  முதன்மை மருத்துவமனையாக விளங்கி ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு     தினசரி மருத்துவ உதவி ஆற்றி வரும்  அரசு பெரியார் மருத்துவமனை எதிரே உள்ள அவையாம்பாள்புரம் சாலை, தற்போது 
சாதாரணமாக சில மணி நேரம் மழை பெய்தாலும் கூட, கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக சரியாக வடிகால் வசதி இல்லாததால், இச்சாலை சிறிய ஏரி போல காட்சியளிக்கின்றது. நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களை டெங்குவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறிப்பாக அப்பகுதியில் தனியார் மருத்துவமனைகளும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களோடு,இதர வணிகர்களும், மாணவமாணவியர்கள் பயிலும்  பள்ளியும், பல வங்கிகளும் இயங்கி வருகின்றன. அரசு மருத்துவமனையையும், பேருந்து நிலையத்தையும் இணைக்க கூடிய சாலையாகவும் இச்சாலை இருப்பதால் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அப்பகுதியைச் சார்ந்து தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் உள்ளதால் அவயம்பாள்புர சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை கடக்காமல் யாரும் செல்லவே முடியாது என்பதால் மேற்படி சாலையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மயிலாடுதுறை  நகராட்சிக்கு அறிவுறுத்தி  இச்சாலையில் தேங்கும் தண்ணீரை அகற்றுவதுடன் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இதே போல அறிவாலயம் பள்ளி, ஸ்டேட் பேங்க் ரோடு ஆகியவற்றில் உள்ள பள்ளங்களையும் மூடி சீரமைத்து தர வேண்டும் என்று பொது மக்களின் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post