ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகள் அகழி மற்றும் மின்வேலி அமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் வசித்து வரும் விசுவநாதன் (மாற்றுத்திறனாளி) என்பவர் வீட்டை காட்டு யானை இரவு 10 மணிக்கு அப்பகுதிக்கு வந்து இரவு 1 மணி வரை சுற்றித்திரிந்த காட்டு யானை வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி காபி குருமிளகு போன்ற பயிர்கள் நாசம் செய்தது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தினந்தோறும் அச்சத்தில் உறைந்துள்ளனர் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள்  முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர் மேலும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையும் அரசும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் இப்பகுதியில் அகழி மற்றும் மின் வேலி அமைத்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்
Previous Post Next Post