நீலகிரி மாவட்டம் பந்தலூர் தமிழ்நாடு அரசு தோட்ட கழகம் அனைத்து கட்சி தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அறவழிப் போராட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தமிழ்நாடு அரசு  தோட்ட கழகம் அனைத்து கட்சி தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களை எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அறவழிப் போராட்டமாக பதாகை வைத்து அரசுக்கு கோரிக்கை மனுக்களை அளித்து தங்களது கோரிக்கை நிறைவேற்ற கோரி அறவழி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் இதில் தமிழக அரசு தற்சமயம் இரண்டு கோரிக்கைகளை மட்டும், நிறைவேற்றியுள்ளது. 
திருத்தப்பட்ட இடைக்கால ஊதியம் 438 ரூபாய்  சம்பளம் உயர்த்தி வழங்க உத்தரவிட்டது, மேலும் இந்த ஆண்டுக்கான தீபாவளி போன 20% வழங்கி உள்ளது, மேலும் இன்னும் சில முக்கியமான கோரிக்கைகள்     
(01) தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம்  (டேன்டி) 3: 10: 2022. அன்று   ( reserve forest)   காப்புக்காடாக மாற்ற இயற்றப்பட்ட அரசாணை எண்: 173-2022. இணை தோட்டத் தொழிலாளர்களிடம் கருத்து கேட்கப்படாமல் போடப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.                            
(02) மேலும்( section 17 வன பாதுகாப்பு சட்டப்பிரிவால்) நீலகிரி மாவட்டம் முழுவதும் கூடலூர் பந்தலூர் தாலுகா  பகுதிகளில்  உள்ள  ஒரு விவசாய நிலங்களை வாங்கவும் விற்கவும் இயலாமல் நிலை உள்ளது உடனடியாக இது சம்பந்தமாக தீர்வு. காணப்பட வேண்டும்.
 (03)மேலும் தோட்டத் தொழிலாளர் குடியிருக்கும் வீட்டை அவர்களுக்கே சொந்தமாக வழங்கிட வேண்டும்.
 ( 04)தமிழக அரசு தேயிலை தோட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் கேரளாவை போன்று இங்கு உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தலா மூன்று ஏக்கர் விகிதம் நிலம் வழங்கப்பட வேண்டும்.
 என தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து இந்த அறவழி போராட்டத்தை அனைத்து கட்சி தலைவர்களும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
 இந்நிலையில் நேற்று இரவு நெல்லியாளம் தேயிலை தொழிற்சாலை பிரிவு (ஜங்ஷன்) வைக்கப்பட்டுள்ள பதாகை. சரகம் எண் 1ல் மருத்துவமனை அருகில் வைக்கப்பட்டுள்ள மற்றும் சரகம் எண் 3ல் குடோன் அருகில் உள்ள பதாகை போன்ற பல பகுதியில் உள்ள பதாகைகளை சமூக விரோத கும்பல் கிழித்து அடித்து நொறுக்கி உள்ளது தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடாது. போராட்டத்தை திசைதிருப்பும் விதமாக மேலும் தொழிலாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இந்தப் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தப்பட வேண்டும். என்ற எண்ணத்தில்  இந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். ஆகவே தமிழக அரசும் தமிழக காவல்துறையும் பதாகையே கிழித்த இந்த சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பததைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இடையூறு  இல்லாமல் தங்களது பணி செய்யும் பகுதியிலே வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post