வடகிழக்கு பருவ மழை தீவிரம் தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் மட்டும் ஒரு நாள் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது
இந்த சூழ்நிலையில் இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள்ளான ஒரு மணி நேரத்திற்குள் மட்டுமே அதிகபடியாக ஆலந்தூர் பகுதியில் மட்டுமே 70.8 மில்லி மீட்டர் வரை கனமழை பதிவாகியுள்ளது
சென்னை வேளச்சேரி ஆலந்தூர் மடிப்பாக்கம் கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலையுங்கும் தண்ணீர் ஆறு போல் ஓடத் தொடங்கியது.
காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தலைமைச் செயலக குடியிருப்பு ஆபீஸர் காலனி என் ஜி ஓ காலனி ஆகிய பகுதிகள் மழை நீர் வெள்ளப் போல் ஓடியது. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசப்பட்டது=
தலைமைச் செயலக குடியிருப்பு ,செக்ரெட்டரியட் காலனி, சிட்டி லிமிட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீட்டுக்குள் இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். சமைக்க கூட முடியவில்லை என தங்களின் வேதனையை அவர்கள் தெரிவிக்கின்றனர்
கழிவு நீர் உள்ளே புகுந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிறுமலைக்கு கூட வீட்டிற்குள் தண்ணீர் வருவதாக அவர்கள் தங்களின் வேதனையை தெரிவிக்கின்றனர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்