கோவை சூலூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு சூலூர் நகர திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 51 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 54-வது நாளாக காலை,மதியம்,இரவு என மூன்று வேளைகளும் உணவு வழங்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்தனர் இதற்கு சூலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் நன்றியை தெரிவித்தனர்